Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

0

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம்  போன்று மதுரையில், 2 இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், ₹70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் ₹5 லட்சம் ரொக்கத்துடன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் ₹5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ₹60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்கள் அமைக்கப்படும்.

நீடாமங்கலம், மன்னார்குடி வட்டாரங்களில் ₹60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆகமொத்தம் ₹6.20 கோடி மதிப்பீட்டில் 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

*அரசு நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச்சலுகை அளித்ததுபோலவே, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பயண சலுகை வழங்கப்படும்.”
என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.