திருச்சி மேலபுலிவார்டு ரோடு, பாலக்கரை பகுதியில் காய்கறி வியாபாரம் செயல்படாது. கலெக்டர் சிவராசு அறிக்கை.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது 07.06.2021 காலை 06.00 மணி வரை மேற்படி ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் மொத்த வியாபாரிகள் கோரிக்கையினை ஏற்று தற்காலிக மொத்த வியாபாரம் நடைபெறும் பகுதியினை தூய்மை செய்து கிரிமிநாசினி தெளிப்பதற்கு ஏதுவான வகையில்
திருச்சி மாநகர பகுதிகளில், மேலபுலிவார்டு ரோடு மற்றும் பாலக்கரை பஜார் பகுதிகளில் தற்போது இயங்கி வரும் காய்கறி/பழங்கள் மொத்த வியாபாரம் இன்று சனிக்கிழமை 29.05.2021 இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை செயல்படாது எனவும்,
மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை (30.05.2021) அன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மேற்படி பகுதிகளில் வழக்கம் போல் காய்கறி/பழங்கள் மொத்த வியாபாரம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் தலைவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.