தமிழக நகராட்சி பொறியாளர் சங்கம் மற்றும் திருச்சி மாநகராட்சி பொறியாளர்கள் ரூ.25 லட்சம் அமைச்சர் கே.என். நேருவிடம் நிவாரண நிதி வழங்கினர்.
தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி பொறியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 22 இலட்சத்திற்கான வரைவோலையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம் நகராட்சி பொறியாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் சூ. கமலநாதன் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு நகராட்சி பொறியியல் சங்கத் மண்டல செயற்பொறியாளர் சேலம் .பொதுச்செயலாளர் எஸ் திருமாவளவன், கண்காணிப்பு பொறியாளர் நகராட்சி நிர்வாக ஆணையரகம், துணைச் செயலாளர் ஆ.கருப்பையா ராஜா மண்டல செயற்பொறியாளர் செங்கல்பட்டு, பொருளாளர் இளங்கோவன் உதவி செயற்பொறி யாளர் , பேரூராட்சிகள் துறை கண்காணிப்புப் பொறியாளர் னு.அன்பழகன் ,உதவி செயற்பொறியாளர் சூ.விஸ்வநாதன், மற்றும் உதவி பொறியாளர்கள் கார்த்தி மற்றும் விஜய் கார்த்தி ஆகியேர் உடன் இருந்தனர்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொறியாளர்கள் சார்பில்
மேலும் திருச்சி மாநகராட்சி பொறியாளர்கள் சார்பில் ரூ .3.00 இலட்சத்திற்கான வரைவோலையை நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என், நேருவிடம் மாநகராட்சி நகர பொறியாளர் எஸ்.அமுதவள்ளி வழங்கினார்.
அருகில் செயற்பொறியாளர்கள் பி..சிவபாதம் , ஜீ.குமரேசன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் உள்ளனர்.