Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பொதுமக்களுக்கு வேளாண்மைத்துறை சார்பில் காய்கறிகள் அமைச்சர் கேஎன்.நேரு தொடங்கி வைத்தார்.

0

தமிழ்நாட்டில் முதலமைச்சர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை
மேலும் தீவிரப்படுத்த இன்று காலை 4.00 முதல் 31.05.2021 அன்று காலை 6.00 மணி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி நடைமுறைப்படுத்த அறிவுறுத்துள்ளார்.

இந்த ஊரடங்கின்போது பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள்” மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விநியோகம் செய்ய அறிவுறுத்துள்ளார்.

இதனடிப்படையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளுக்கும் தலா 5 வண்டிகள் (TATA ACE-3, தள்ளுவண்டி – 2 ) மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி விநியோகம் செய்ய கீழ்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

1. முககவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்.

2. சானிடேசன் கட்டாயமாக பயன்படுத்தவேண்டும்.

3. காய்கறி விற்பனையின் போது கட்டாயமாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

4.காய்கறி /கனிகள் விற்பனை தவிர இதர வியபாரம் செய்ய
அனுமதி இல்லை.

5. விற்பனை அனுமதிக்கப்பட்ட நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

6. வெப்ப பரிசோதனை கருவி அவசியம் வைத்திருக்க
வேண்டும்.

7. மேற்கண்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் அனுமதி ரத்து உடனடியாக செய்து அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தேவை ஏற்படின் கூடுதலாக வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மளிகை பொருட்களை பொருத்தமட்டில் சம்மந்தப்பட்ட மளிகைகடை நிறுவனங்களில் தொலைபேசி மூலமாக தங்களுக்கு தேவையான மளிகை விவரத்தினை தெரிவிக்கும் பட்சத்தில் நேரடியாக வீட்டிற்கு பொருட்கள் வழங்கப்படும். இதற்கென ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மேற்பார்வையாளர் பணியினை செம்மையாக செய்ய பணி அமர்த்தப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் சரிவர பயன்படுத்த கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட திட்டத்தினை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு
இன்று காலை கோ – அபிஷேகபுரம் கோட்டத்தில் உள்ள அண்ணாநகர் உழவர் சந்தையில் துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவராசு சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீரங்கம் பழனியாண்டி, லால்குடி சௌந்தரராஜன் முன்னாள் துணை மேயர் அன்பழகன் பகுதி செயலாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வம்,வேளாண் அதிகாரிகள் சரவணன், சுகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.