தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு: அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக திரிந்த பொதுமக்கள்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மேலப்புலிவார் சாலையில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாளை முதல் தளரவுகளற்ற பொது முடக்கம் அமலுக்கு வருவதால் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் சந்தையில் குவிந்தனர். இதனை சாதமகமாக பயன்படுத்தி வியாபாரிகள் அனைத்து காய்கறிகளின் விலையும் ஜந்து மடங்கு உயர்த்தி விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லாத நிலையில் இன்று திடீரனெ்று 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பத்து ரூபாய் தேங்காய் 30 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் 75 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தைப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. மக்கள் கூட்டத்தால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த கடும் விலை உயர்வினால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவல் எதிரொலியாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு நாளை முதல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி, நகைக்கடைகளை காட்டிலும் காய்கறி மற்றும் இறைச்சி வாங்க பொதுமக்கள் தீவிரம் காட்டினர். இதனால் காய்கறி சந்தை மற்றும் இறைச்சி விற்பனை கூடங்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஒரு சில பகுதிகளில் நகை அடகு கடையிலும் மக்கள் வரிசையாக நிற்கும் நிலையை காண முடிந்தது.
திருவண்ணாமலையில் இருக்கும் பிரதான சந்தைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தாலும் நெரிசலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
பாளையத்து வெளியூர் செல்லும் பஸ்களில் மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தேடிச் சென்றனர் .
இரவு 10 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இருந்துகொண்டேதான் இருந்தது