தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த்.
கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த்.
சட்டசபை தேர்தலிலும் கூட சுற்றுப் பயணம் மேற்கொண்ட விஜயகாந்த், பொதுமக்களிடம் கையசைத்து மட்டும் வாக்கு கேட்டார்.
சட்டசபை தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக தோல்வி அடைந்தது.
இதன்பின்னர் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகளை மட்டும் விஜயகாந்த் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.