அரியானாவில் 115 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்று மாநில சுகாதார மந்திரி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ், ‘மாநிலத்தில் இதுவரை மொத்தம் 115 பேருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோமிகோசிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
கருப்பு பூஞ்சை வைரஸ் சிறப்பு சிகிச்சைக்காக மாநிலம் முழுவதிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தனியாக 20 சிறப்பு படுக்கைகள் கொண்ட வார்டுகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது’ என்றார்.
கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு அரியானாவில் அறிவிக்கப்பட்ட நோயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.