மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூன்று பேர் பலி..?
மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் 1400நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய 400படுக்கைகளிலும் நிரம்பிய நிலையில் 120பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சூழலில் திடிரென மருத்துவமனையில் செயல்பட்டுவந்த ஆக்சிஜன் நிரப்பிகள் முழுவதுமாக தீர்ந்து போனது.இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடக்கூடிய சூழல் ஏற்பட்டது.
இதனிடையே போதிய ஆக்சிஜன் இல்லாத நிலையில் 3பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக தற்காலிகமாக சிறிய அளவிலான சிலிண்டர்கள் மூலமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது.
நேற்றிரவே ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய நிலையில் தொடர்ந்து முறையாக கண்காணிப்பு இல்லாத சூழலில் இன்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது.
தொடர்ந்து திருச்சியிலிருந்து ஆக்சிஜன் டேங்கர் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர்மல்க வேதனையுடன் காத்திருந்த நிலை காணப்பட்டனர்.
இதையடுத்து மருத்துவர்கள் அவர்களுக்கு. மன தைரியத்துடன் இருக்க கோரி நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினர்.