ரேஷன்கடையில் காணாமல் போன 7 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதி.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பொது முடக்கம் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என்று சொல்லப்பட்டது. எனவே இந்தியாவின் பல மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.
தேர்தல் பிரச்சாரத்திலேயே கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்குவோம் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின் இரண்டு தவணையாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்து அதற்கான அரசு ஆணையில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும் ரேஷன் கடைகளில் டோக்கன் நடைமுறை மூலம் அது விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவிரி நகரில் உள்ள ரேஷன்கடையில் கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7 லட்சம் காணாமல் போகியுள்ளது. இதுபற்றி ரேஷன் கடை சூப்பர்வைசர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்