கடைகள் திறந்திருக்கும் நேரத்தை 8-12 ஆக மாற்ற வேண்டும் விக்கிரமராஜா கோரிக்கை.
சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின்
செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, காலை 10 மணி வரை கடைகளை திறந்திருப்பதால், வியாபாரம் குறைவாக நடைபெறுவதாகவும்,
ஆனால் அபராதம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து வியாபாரம் செய்தால், அபராதம் வசூலிப்பதோடின்றி, கடைகளை பூட்டி சாவிகளைப் பிடுங்கும் அதிகாரிகளின் செயல் நியாயமற்றது என்று பேசிய விக்கிரமராஜா,
வணிகர்களுக்கு வியாபாரம் செய்ய அரசு சுமூக நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், கடைகள் திறந்திருக்கும் நேரத்தை 8-12 என்று மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்தார்.