தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள் காலை 4 மணி வரை 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 4 மணி வரை என 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்க பிறப்பிக்கப்பட்டது.
முழு ஊரடங்கில் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.