மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவர்கள் கபசுர குடிநீர் அருந்துவதற்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.
அதன்படி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், பஸ் பயணிகளுக்கு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ரிசர்ச் கவுன்ஸில் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சித்த மருத்துவர்கள் சுப்பையா பாண்டியன், ஜான் ராஜ்குமார், கருணாநிதி மற்றும் பேராசிரியர் ரவிசேகர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கபசுர குடிநீர் இலவசமாக வழங்கினர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரமும் வழங்கினார்கள்.
அத்துடன் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு முக கவசம் மற்றும் பார்சல் சாப்பாடு இலவசமாக வழங்கப்பட்டது.