தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) திருச்சியில் உள்ள
வேதித் தொழில் நுட்ப துறையின் தொழில்நுட்ப கருத்தரங்கு (அல்கெமி ’21)
இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மூன்று நாள் நிகழ்வை
என்ஐடி திருச்சியின் வேதித் தொழில் நுட்ப சங்கம் – சிஇஏ ( Chemical
Engineering Association (ChEA) ஆன்லைன் மூலம் ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த தொழில்நுட்ப கருத்தரங்கத்தை (அல்கெமி ’21) வேதித் தொழில் நுட்ப
துறையைச் சேர்ந்த பேராசிரியர் டி. கே. ராதாகிருஷ்ணன்
வரவேற்புரையாற்றினார். அவர், உலகளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வேதி
பொறியியல் துறையின் பங்களிப்பு குறித்து விளக்கினார்.
அல்கெமி ’21 மாணவ
தலைவர் சூர்யா, ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளர் காண்டே ஆஷிஷ் மற்றும் மாணவர்
அமைப்பாளர்களின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அவர் தனது பாராட்டுகளைத்
தெரிவித்தார்.
மேலும் அல்கெமி ஆசிரிய ஆலோசகராக தொடர்ந்து ஆதரித்த
பேராசிரியர் சரத் சந்திரபாபுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இறுதியாக,
பார்வையாளர்களின் உற்சாகமான பங்கேற்புக்கு நன்றி தெரிவித்தார். இதைத்
தொடர்ந்து இயக்குநர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் தொடக்கி வைத்து
சிறப்புரையாற்றினார்.
வேதித் தொழில் நுட்ப துறையின் தலைவர் பேராசிரியர்
பி.கலைச்செல்வி துறையின் பல்வேறு முன்னேற்றங்களையும், சாதனைகளையும்
குறிப்பிட்டு, பங்கேற்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரிய
உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நிகழ்வை பெரிய வெற்றியாக
மாற்றியமைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக இந்திய
வேதித் தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் எம் கே ஜா கலந்து
கொண்டு சிறப்பித்தார்.
இவர் பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் துறையின்
நவீன தொழில்நுட்பத்தை விவரித்து உரை வழங்கினார்.
திருச்சியின் என்.ஐ.டி.யில் வேதித் தொழில் நுட்ப துறையின் நிறுவனர்
மற்றும் முதலாம் துறை தலைவர் நினைவாக தொடங்கப்பட்ட டாக்டர் எஸ். எச்.
இப்ராஹிம் அறக்கட்டளை சொற்பொழிவு (Endowment Lecture) அல்கெமி ‘ 21
தொடக்க நாளிலும் நடைபெறும். இந்த ஆண்டு ஃப்ளூர் ஆஸ்திரேலியா லிமிடெட்
நிறுவனத்தின் முன்னணி பொறியியலாளர் ரவி சங்கரன், ‘செயல்முறை
பாதுகாப்பு’ குறித்த சொற்பொழிவை வழங்கினார்.
இந்த விரிவுரை மாணவர்களுக்கு
வேதித் பொறியயில் தொழில் குறித்து சிறந்த நுண்ணறிவுகளை வழங்கும்.
மூன்று நாட்களில் பல நிகழ்வுகள், காகித விளக்கக்காட்சிகள், வினாடி
வினாக்கள் மற்றும் புகழ்மிக்க பிரபலங்களான முனைவர் சுரேஷ்குமார்
பாட்டியா, பேராசிரியர், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்) மற்றும் முனைவர்
சுதாசத்வா பாபு, இயக்குநர் அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்
போன்றவர்களின் விரிவுரைகள் நடைபெறவுள்ளது. மாட்லாப் (MATLAB), ஆஸ்பென்
(ASPEN) போன்ற பல பயிலரங்குகளும் (worshop) மற்றும் ஆய்வு கட்டுரை
எழுதுதல் ஆகியவற்றிக்கு சிறந்த வல்லுநர்களால் கைகோர்த்து பயிற்சி
அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது அனைத்தும் வேதி பொறியயில்
மாணவர்களுக்கும் பயனளிக்கும்.
அல்கெமி 2013 முதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது, இந்தியா
முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 1000
க்கும் மேற்பட்ட மாணவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த ஆண்டு,
COVID-19 தொற்று நிலைமையின் போதும் கூட இந்த தொழில்நுட்ப
கருத்தரங்குக்கு (அல்கெமி ’21) அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் மற்றும்
பங்கேற்பாளர்கள் வந்துள்ளார்கள். முடிவில் மாணவ தலைவர் பி.ஜே. சுரேஷ்
நன்றியுரை ஆற்றினார்.