திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பகுதி எடமலைப்பட்டி புதூர், எம்ஜிஆர் நகர், ராஜீவ் காந்தி நகர்
பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்
வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரியை உடனடியாக கட்டக் கோரி மாநகராட்சி நிர்வாகம் வற்புறுத்தியதாகவும் தண்ணீர் வரி கட்டாதவர்கள் இல்லத்தில் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் வருமானம் குறைவாக இருப்பதாக எவ்வளவு முறை எடுத்துக் கூறினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றம்சாட்டி இன்று
அதிகாரிகளை சந்திப்பதற்காக கிராப்பட்டி பகுதியில் அமைந்துள்ள இளநிலை பொறியாளர் அலுவலத்தை திமுக முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் அதிகாரிகளிடம் மனு கொடுக்க வந்தனர்.
அப்போது அங்கு அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் முன்னாள் கவுன்சிலர் செல்வம் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.