நேபாள நாட்டில் சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான கபாடி மற்றும் தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சி மணப்பாறையை சேர்ந்த வீரர்கள் சரவணகுமார்,வினோதனி, அருண் ஆகியோர் தகுதி பெற்று நேபாளத்தில் வரும் ஏப்ரல்28 முதல் 30 வரை நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
இவர்கள் இன்று காலை 9.20 மணியளவில் திருச்சியில் இருந்து ரயில் மூலமாக புறப்பட்டு சென்றார்கள் இந்த மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வத்ற்க்கான உதவிதொகைகளை வழங்கி அவர்களை திருச்சி ரயில் நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தொழில் முனைவோர் அணியின் மாநில செயலாளரும், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மையத்தின் வேட்பாளரும், ஆப்பிள் மில்லட் உணவக உரிமையாளருமான வீரசக்தி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் பயிற்ச்சியாளர் சங்கர் தாமோதரன் தமிழக பொருப்பாளர் (YRGSAOT ) சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் மாற்றுத்திறனாளி சங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம்
தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்யாராக்கினி தினசேவை அறக்கட்டளை நிர்வாகி பகவதி புதியபாதை அறக்கட்டளை நிர்வாகி தீபலட்சுமி,ஹேமலதா,ஆர்ம்ஸ்டாரங் ரூபி, மாற்றம் அமைப்பை சேர்ந்த மணிவேல் வழக்கறிஞர் ஆறுமுகம் பிரவீன்ராஜ்,அல்லிகொடி ஜான்,பிரபு,தினேஷ்,மைக்கேல், ஜீவா மற்றும் மாணவர்களின் பெற்றோர் நண்பர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.