Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்கள் வேலை நீக்கம். திருச்சியில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம்.

0

'- Advertisement -

Ad banner

கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்ததை கண்டித்து குடும்பத்துடன் கஞ்சித் தொட்டித் திறக்கும் போராட்டம்.

TVK ad

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி உயர்வு கேட்டு போராடிய சுமைப்பணி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

தொழிலாளர் ஆணையர் உத்தரவுப்படி 55 கிலோ சுமை தூக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஓவர்லோடு ஏற்றுவதை தடை செய்ய வேண்டும். கூலி உயர்வு பேச்சுவார்த்தை விரைந்து
நடத்தி கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்தோடு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். போராட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் சுமைப்பணி சங்க மாவட்ட குழு உறுப்பினர் சின்னதுரை, தக்காளி சுமைப்பணி சங்க செயலாளர் ரமேஷ், மணல் மாட்டுவண்டி சங்க தலைவர் சேகர், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.