Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் ரெவரண்ட் தர்மராஜனின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கல்வி உதவித்தொகை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் ரெவரண்ட் A.தர்மராஜ் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதன் தலைவர் ரெவரெண்ட் ஆபிரகாம் தாஸ் தலைமையில் திருச்சியில் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. திருச்சி பாலக்கரை வேர் ஹவுஸ் புனித உத்திரிய மாதா கல்லறையில் உள்ள தர்மராஜ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் செயலாளர் ஆபிரகாம் தாஸ் தலைமையில் மலம்பட்டியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கல்வி உதவி தொகையும், ஏழை எளிய மக்களுக்கு உதவித்தொகையும் தலைவர் ஆபிரகாம் தாஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சொத்து அதிகாரி துரை, பாஸ்டர் சாமுவேல், கிளை போதகர்கள் மரிய தாஸ், ஜான் பிரிட்டோ மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.