அம்பேத்கரின் பிறந்தநாள் விழா அறம் மக்கள்நல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
டாக்டர் அம்பேத்கரின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு
திருச்சி அறம் மக்கள் நல சங்க தலைவர் சு. ராஜா, பொதுச் செயலாளர் எஸ் ஆர் கே (எ) ரமேஷ் குமார் ஆகியோர் தலைமையில் ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அறம் மக்கள் நல சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முறையான சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.