அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது படத்துக்கு மலர் தூவியும், உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு
விடுதலை சிறுத்தை கட்சியின்
அச்சு ஊடக பிரிவு மாநில செயலாளர் ரமேஷ் தலைமையில்
தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள்
தமிழாதன்,
அரசு, கனியமுதன், சந்தனமொழி, புல்லட்லாரன்ஸ்,
அல்பர்ட்ராஜ்
ஆல்பர்ட்ஹென்றி, பெரியசாமி, முருகேசன்,
பெல் சந்திரசேகர், அர்ஜுனன் உட்பட 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் மத்திய பேருந்து நிலையத்தில்
பொதுமக்கள் ஆயிரம் பேர் இருக்கு முககவசம் வழங்கப்பட்டது.