கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் பயணிகளை தவிர, இதர நபர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை ரூ.10-ல் இருந்து 5 மடங்காக உயர்த்தி ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதிவரை சோதனை முறையில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
இந்த கட்டண உயர்வானது திருச்சி ஜங்ஷன், தஞ்சாவூர் ஜங்ஷன், விழுப்புரம் ஜங்ஷன், மயிலாடுதுறை ஜங்ஷன் மற்றும் புதுச்சேரி ரெயில் நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது.
சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு பயணிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு திருச்சி ரெயில்வே கோட்ட வணிக மேலாளர் எஸ்.ராஜசுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்..