உறையூர் வெக்காளியம்மன் கோவில் 13ம் ஆண்டு பூச்சொரிதல் விழா –
SRK (எ) ரமேஷ்குமார் தலைமையேற்று அன்னதானம் வழங்கினார்
——————————————
உறையூர் வெக்காளியம்மன் 13ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் SRK என அழைக்கப்படும் ரமேஷ்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். 13ம் ஆண்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழா திருச்சி கோரிமேடு பகுதியில் நடைபெற்றது.
இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பூச்சொரிதல் விழாவையொட்டி அறம் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
அன்னதான நிகழ்விற்கு அறம் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் ரமேஷ்குமார் தலைமையேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் இளங்கோவன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் மதிவாணன், விழா குழு தலைவர்கள் மணி, பாலா, தேமுதிக ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கடேசன், துணைச்செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பூச்சொரிதல் விழாவிற்கான ஏற்பாடுகளை கோரிமேடு பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்.