திருச்சியில் இன்று லோக் தந்ரிக் ஜனதா தளம் மாநிலத் தலைவர் ராஜகோபால் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
எதிர்வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதா தளம், திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள லோக் தந்திரிக் ஜனதா தளத்தின் தொண்டர்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்
பா.ஜ.கவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக அணியினை வீழ்த்த வேண்டுமென்றால் மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.கவின் கைப்பாவையாக செயல்படுகின்ற அதிமுக அணியை தோற்கடிக்க வேண்டும் இன்றைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத கொள்கையால் ஏழை, நடுத்தர, விவசாய, தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்தியாவின் பன்முகத்தன்மை, சமூக நீதி மதச்சார்பின்மையை காக்கவும் தமிழக மக்கள் பா.ஜ.க இடம் பெற்றுள்ள அதிமுக அணியை தோற்கடிக்க வேண்டுமென தமிழக மக்களை தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதா தளம் கேட்டுக்கொள்கிறது
என லோக் தந்திரிக் ஜனதாதளம் மாநிலத் தலைவர் ராஜகோபால் பேட்டியின்போது கூறினார்.
பேட்டியின்போது ப அருகில் மாநில துணை தலைவர் K.C.ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் இம்ப் ராம் பால், மாநில விவசாய அணி தலைவர் வைத்திலிங்கம், மாநில செயலாளர் சுப்பிரமணியன், தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, திருச்சி மாவட்ட தலைவர் ஹேமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.