தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11-ல் வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும்.
மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்கள் வாழ்வை மேம்படுத்தவும் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.