டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி, சவுகன் பன்கர் ஆகிய 5 மாநகராட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.
327 வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்து இருந்தனர். ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இதற்காக வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி ஆகிய 4 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றது.
டெல்லியில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.