திருச்சி அடுத்த மணப்பாறை தொகுதியை சேர்ந்தவர் நடிகர் விமல். திமுக பிரமுகரான இவர் திருச்சி திமுக மூத்த நிர்வாகி கே.என்.நேருவுடன் நெருக்கமாக இருப்பவர்.
விமலுக்கு குழந்தை பிறந்தபோது கே.என்.நேரு நேரில் சென்று வாழ்த்தினார். திருச்சியின் இன்னொரு திமுக விஐபியான அன்பில் பொய்யாமொழியையும் சந்தித்து பேசி வந்தார் விமல்.
இதையெல்லாம் வைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் விமல் போட்டியிடப்போவதாக பேச்சு எழுந்தது. உதயநிதி ஸ்டாலினிடம் விமலுக்கு சீட் கொடுக்கலாம் என்று கே.என்.நேரு சொன்னதாகவும், அதற்கு ஆத்திரப்பட்ட உதயநிதி, ‘அவனெல்லாம் ஒரு நடிகன்’ என்று அலட்சியமாக சொன்னதாகவும் கூட பேச்சு அடிபட்டது.
ஆனால் , தற்போது விமலின் மனைவி அக்ஷயா, மணப்பாறை தொகுதியில் போட்டியிட திமுகவிடம் விருப்பமனு கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக உதயநிதிஸ்டாலினை மனைவியுடன் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருக்கிறார் விமல்.
அக்ஷயாவுக்கு ஆதரவாக நடிகர் விமல் பிரச்சாரம் செய்வார் என்பதோடு, விமலுக்கு ஆதரவாக சூரி உள்ளிட்ட நடிகர்களும் பிரச்சாரம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் விமலின் மனைவிக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்றே திருச்சி திமுகவினரின் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.