திருச்சியில் எஸ் ஆர் எம் யூ-வின் திருச்சி மற்றும் பொன்மலை கோட்டத்தின் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி ரயில்வே நிலைய பார்சல் அலுவலகம் அருகில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு வின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக SRMU தலைவர் ராஜா ஸ்ரீதர், சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தின் தீர்மானமாக ரயில்வேயை முழுமையாக தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட கோரியும்,
7 லட்சம் இரயில்வே தொழிலாளர்களை 2023 ஆம் ஆண்டுக்குள் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கைவிட கோரியும், 50 வயது நிறைவு அல்லது 33 வருட பணி நிறைவு என்ற அடிப்படையில் மோசமான சர்வீஸ் ரிக்கார்டு ( APAR ) என்று கூறி வெளியேற்ற நினைக்கும் திட்டத்தை கைவிட கோரியும், குரூப் ஏ பிரிவு அனைத்து அதிகாரிகளையும் ஒரே பிரிவில் இணைத்து Director என்ற பெயரின் கீழ் பணிபுரிய வைக்கும் திட்டத்தை கைவிட கோரியும்,
சிறப்பு ரயில் என்ற பெயரில் கட்டண உயர்வும் , முதியவர்கள் , மாற்று திறனாளிகள் , கண்பார்வையற்றவர்கள் வழங்கப்பட்ட கட்டண சலுகை 40 % , 50 % மறுக்கப்பட்டு , மறக்கடிக்கப்படுவதை கண்டித்தும், ரயில் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்கள் மற்றும் வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்க நினைப்பதை நிறுத்திட கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்
,
கொரோனா காலகட்டத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நேரத்திலும் சரக்கு ரயிலை ரயில்வே தொழிலாளர்கள் இயக்கினர். தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.
பதினைந்து நாட்களுக்கு முன்பாக ரயில்வே தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
உடனடியாக ரயில்வே நிர்வாகம் அதனை நிறைவேற்றித் தரும்படியும், வழக்கமான ரயில்களின் கட்டணத்தை கொரோனா காலகட்டத்தில் சிறப்பு ரயில்கள் என்று கூறி டிக்கெட் விலையை உயர்த்தி வைத்துள்ளனர். உலக வங்கி மூலம் சரக்கு தண்டவாள மறப்பதற்கு கடன் பெற்று தற்போது நிதிநிலை அறிக்கையில் விற்கப் போவதாக அறிவித்துள்ளனர் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மூலம் வருமானம் அதிகம் என்பதால் தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத அரசுக்கு எதிராக ரயில்வே தொழிற்சங்கத்தினர் வாக்களிப்போம் எனவும், தொழிற்சங்கங்களை ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.