Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசியக் கல்லூரியில் ஆராய்ச்சி இயற்பியல் துறை எண்டோமென்ட் விழா

0

திருச்சியில்
முதுகலை மற்றும் ஆராய்ச்சி இயற்பியல் துறை தேசிய கல்லூரி
சார்பில் டைமண்ட் ஜூபிலி எண்டோமென்ட் விழா நடந்தேறியது.

இயற்பியல் துறை
மாணவர்கள் , பேராசிரியர்கள் மற்றும் பிற துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் .
விழாவானது தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கியது.

கல்லூரி தாளாளர் மு.இரகுநாதன் மற்றும்
கல்லூரி முதல்வர் , முனைவர் சு.சுந்தரராமன் இவ்விழாவினை நடத்த
ஊக்குவித்தனர்.இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் பாரி வரவேற்புரையாற்றினார்.

பின்னர் சிறப்பு விருந்தினார் மு.நடராஜன் அவர்களை கல்லூரி முதல்வர் முனைவர்.
சு.சுந்தரராமன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

முனைவர் பாரி
மு.நடராஜன் அவர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.

சிறப்பு விருந்தினார் சிறந்த மேற்கோள்களுடன்
தனது உரையை
தொடங்கினார்.

வளர்ந்து வரும் விஞ்ஞான படைப்புகள் பற்றி அவர் சிறப்பாக விவாதித்தார்
, மேலும் அவர் இரவில் வானத்தை பார்ப்பதன் மூலம் வானியல் துறையில் ஆர்வத்தை வளர்க்க
முடியும் என ஊக்குவித்தார்.

விழாவின் இறுதியில் தேசிய கல்லூரி இயற்பியல் துறையின்
உதவிப் பேராசிரியை
யு.சாந்திதேவி நன்றி உரையாற்றினார் , விழாவானது நாட்டுப்பண்ணுடன்
இனிதே நிறைவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.