திருச்சியில் இலவச சிலம்பாட்ட பயிற்சிக்கு ரயில்வே போலீசார் தடை.
திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் அரவிந்து என்பவர்
ஜி கார்னர் மைதானத்தில் ஓரமாக அமைந்துள்ள ஹெலிபேடு அருகே குழந்தைகள்,சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், மாணவிகள் என 50க்கும் மேற்பட்டோருக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் காலை 7 மணிக்கு அல்லது மாலை 5 மணிக்கு என ஒரு மணி நேரம் இலவச பயிற்சி அளித்து வருகிறார்.
இதனை பொன்மலை ஆர் பி எஃப் காவலர்கள் இங்கு பயிற்சி அளிக்க அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறி தடை விதித்துள்ளனர்.
இங்கு சிலம்பாட்டத்திற்க்கு மட்டும் தடை விதித்துள்ள RPF மற்றபடி தினமும் கிரிக்கெட், வாலிபால் விளையாடும் யாருக்கும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடை குறித்து சுப்பிரமணியபுரத்தில் ஒருவரிடம் கருத்து கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:-
பொன்மலை ரயில் நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் இறங்கி தனியாக நடந்து வரும் நபர்களிடம் இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வாட்ச் ,பணம், செல்போன் போன்றவற்றை பிடிங்கி சென்றுள்ளனர்.
ஜி கார்னர் ரயில்வே மைதானம், பொன்மலை ரயில்வே மைதானம், மற்றும் பொன்மலை ரயில்வே காலனிகளில் உள்ள பாழடைந்த வீடுகள் என அனைத்து இடங்களிலும் மது அருந்துதல், பாலியல் தொழில் போன்ற சமுதாய கேடான வேலைகள் நடைபெற்று வருகிறது. ( ரயில்வே பகுதியான குட்செட் மேம்பாலத்தில் இரவு 8 மணிக்கு எல்லாம் திருநங்கைகள் அமர்ந்து அவ்வழியே செல்லும் ஆண்களை விபச்சாரத்துக்கு அழைத்து செல்கின்றனர்.)
இவற்றையெல்லாம் தடுக்காத, பாதுகாப்பு கொடுக்காத RPF யினர்
ஒரு காவலர் தனது வேலை நேரம் போக ஒய்வு நேரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக சிறுவர்களுக்கு பயிற்றுவிக்கும் இந்த சிலம்ப பயிற்சியை தடுக்கும் வகையில் செயல்பட்டு வருவது எந்த வகையில் நியாயம் என கூறினார்.
இது மட்டும் இல்லாமல் ரயில்வே ஆங்கிலோ இந்தியன் பள்ளி அருகில் ஒருவர் மாத கட்டணம் வசூலித்துக் கொண்டு சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார், இவர் முறைப்படி அனுமதி வாங்கி உள்ளாரா ?
யார் தூண்டுதலின்பேரில் இது நடைபெறுகிறது என தெரியவில்லை. இலவச சிலம்ப பயிற்சி அளிப்பதற்கு ரயில்வே DRM யிடம் அனுமதி வாங்க வேண்டுமா?
ஓர் உயர் அதிகாரி எத்தனையோ பணிகள் இடையே ஒரு மைதானத்தில் விளையாட அனுமதி வழங்குவதுதான் வேலையா ?
RPF துறையினர்களுக்கு ஒர் வேண்டுகோள் மற்றவர்கள் தூண்டுதலின்பேரில் சிலம்பாட்ட கலையை அழிக்க நினைக்காதீர்கள் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம் என அவர் கூறினார்.