திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டையை உள்ளடக்கி அமைந்துள்ளது திருச்சி கிழக்கு தொகுதி. 1951 முதல் திருச்சி -1 என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சர்ச் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரியகடைவீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலை உள்ளிட்டவைகள் அமைந்திருப்பது இத்தொகுதியின் சிறப்பம்சம்.
மாநகராட்சியின் 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 33, 34, 35, 37, 38, 43 ஆகிய 25 வார்டுகளைக் கொண்டுள்ள இத்தொகுதியில் 1,20,204 ஆண்கள், 1,26,614 பெண்கள், 31 திருநங்கைகள் என 2,46,849 வாக்காளர்கள் உள்ளனர்.
திமுகவின் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியில் 1984, 1989-ல் மலர்மன்னன், 1996, 2001-ல் பரணிக்குமார், 2006-ல் அன்பில் பெரியசாமி வெற்றி பெற்றனர்.
இடையில் 1991-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி வெற்றி பெற்றார்.
2011-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன் வெற்றி பெற்று, அரசு தலைமை கொறடாவாக பணியாற்றினார். 2016 ஆம் நடைபெற்ற தேர்தலில் வெல்லமண்டி நடராஜன் வெற்றிபெற்று சுற்றுலாத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டடு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கிழக்கு தொகுதியில் 2016 வரை இருந்த பல்வேறு பிரச்சினைகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிறைவேற்றி வைத்தார். குடிநீர் கட்டுப்பாடு, கழிவுநீர் மற்றும் குப்பைகளால் ஏற்படும் சுகாதாரமின்மை என இருந்த பல இடங்களில் அதிகரிகளை அழைத்து நேரில் சென்று சுத்தம் பணிகளை செய்தார்.
கொரோனா ஊரடங்கு நேரத்திலும் பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினருக்கு நலத்திட்டங்கள், சாலையோரம் உள்ள ஆதரவற்றோருக்கு தன் கையில் இருக்கும் பணத்தை தந்து உதவினார். கிருமி நாசினி தெளிக்கும் பணியினை ஒவ்வொரு தெருவாக சென்று தனது கைகளால் அடித்து வந்தார்.
போக்குவரத்தால் சிக்கி தவித்த சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கும் பணி, யானை குளத்தில் வணிக வளாகம் கட்டும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
தனது தொகுதி மட்டுமில்லாமல் சுற்றுலாத்துறை அமைச்சராக தமிழகம் முழுவதும் தனது பனியினை செவ்வனே செய்து வருகிறார்.
இந்நிலைக்கு வருகின்ற சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து உள்ளார்.
இவருக்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் வசித்து வரும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளதாக தகவல்.
இதுவரை திருச்சியில் வெற்றி பெற்ற மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் யாரும் திருச்சியில் தங்கி பணிபுரிந்ததாக சரித்திரமே இல்லை.
உதாரணமாக தலித் எழில்மலை, எல்.கனேசன், திருநாவுக்கரசு, இவர்கள் எம்பிக்கள் ஆனாலும் இவர்கள் வெற்றி பெற்ற பிறகு தொகுதிக்குள் வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை வானம் இனிகோ இருதயராஜ் திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அதன் பிறகு ஐந்து வருடம் இவரை இங்கு காணவே முடியாது.
இதேபோல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு போட்டியாக ஆவின் சேர்மன் கார்த்திகேயன் கிழக்குத் தொகுதி போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளார்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நேரில் சந்திக்க முடியும் ஆனால் பத்திரிக்கையாளர்கள் கூட ஆவின் சேர்மன் கார்த்திகேயனை நேரில் சந்திக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் , செய்தி எதுவேண்டுமானாலும் அவரது தம்பி அரவிந்தை சந்திக்க கூறி தகவல் வரும் அரவிந்தை தான் அனைவரும் சந்தித்துப் பேச வேண்டும்.
கடந்த ஒரு மாதமாக கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து பண உதவி செய்து வருகிறார் ஆவின் கார்த்திகேயன். இதற்கு முன்பு எதுவும் செய்யாத கார்த்திகேயன் இப்போது பண உதவி செய்வது ஏன்?
அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டும் உதவி செய்தால் வெற்றி பெற்று விட முடியுமா?
கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டால் அவருக்கு எதிராக போட்டியிடும் வெல்லமண்டி நடராஜன் எளிதாக வெற்றி பெறுவார் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.