1.திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது.
திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து திருச்சி .மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர், காந்தி மார்க்கெட், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கண்காணிப்பின் போது மூர்த்தி ,சர்புதீன், ஜெகதீஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2.உறையூரில்
மூதாட்டி திடீர் மாயம்.
திருச்சி உறையூர் காந்திபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் இவரது மனைவி கஸ்தூரி. இவரது மகன் ராஜராஜசோழன் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். அவர் தொழில் விஷயமாக வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து தனியாக இருந்த கஸ்தூரி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பெயரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான கஸ்தூரியை தேடி வருகின்றனர்