தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களில் 6 சவரன் வரை அடமானம் வைத்துப் பெறப்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய்யப்படும். அத்துடன் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.