தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுபான்மை பிரிவு நலத்துறை அமைச்சர் வளர்மதி ஏற்பாட்டில்
ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பாக செயலாளர் வீ.என். ஆர்.செல்வம், SETC போக்குவரத்து மண்டல இணை செயலாளர் முருகன் மற்றும் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்