ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள பொது கூட்டங்கள். மு.பரஞ்ஜோதி அறிக்கை
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 24.02.2021, 01.03.2021, 02.03.2021 மற்றும் 03.03.2021 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி புறநகர் மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கீழ்கண்டவாறு பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
வருகிற 24.02.2021 (புதன் கிழமை) மாலை 6 மணி அளவில் துறையூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.நல்லுசாமி, தலைமைக் கழக பேச்சாளர் சேலம் உரைமுரசு கே.ஏ.யூசுப் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
வருகிற 01.03.2021 (திங்கட் கிழமை) மாலை 6 மணி அளவில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.பொன்னுசாமி, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் பொன்.செல்வராஜ் அவர்களும், தலைமைக் கழக பேச்சாளர் மானகிரி பாண்டியன் அவர்களும் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
வருகிற 02.03.2021 (செவ்வாய் கிழமை) முசிறி சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, தலைமைக் கழக பேச்சாளர் கலைமாமணி ஜி.சிவன் ,ஸ்ரீநிவாசன் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
வருகிற 03.03.2021 (புதன் கிழமை) மாலை 6 மணி அளவில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தேவி வழங்கும் ராஜ் நினைவு கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும், கழக அமைப்புச்செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி அவர்களும், கழக விவசாய பிரிவு துணைச்செயலாளர் ஏ.பி.சி.கணேசமூர்த்தி தலைமைக் கழக பேச்சாளர் கே.முருகுமணி சிறப்புரை ஆற்றும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட பொதுக்கூட்டங்களில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்டக் கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.