திருச்சியில்
விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளி 2008-ம் ஆண்டு 2nd பேட்ஜ்” காவலர்கலும் ஆசான்களும் 13 வருடங்கள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில் 2008-ம் ஆண்டு பயிற்சி மேற்கொண்ட காவலர்களும் ஆசான்களும் சந்தித்து தங்களுடைய அனுபவங்களையும் பழைய நினைவுகளையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டனர். இதில் பயிற்சி பள்ளி ஆசான்களை சந்தித்தும் மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் 13 வருடங்களுக்கு முன்னர் எப்படி அனைவரும் ஒன்றாக பயிற்சி எடுத்து பழகினார்களோ அந்த உணர்வை உணர்ந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.இது போன்ற சந்திப்பு இனி வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் காவலர் ஆனந்த எழுதிய “காவல் சுவடுகள்” என்ற நூலை பதிப்பாளர் கணேசன் அவர்கள் வெளியிட ஆசான்கள் பெற்றுக்கொள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது…