திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொன்மலை பகுதி சார்பில் டீசல், பெட்ரோல்,கேஸ் விலையை உயர்வை கண்டித்தும் , தேர்தல் பரப்புரை தொடங்கும் விதமாகவும்
மாபெரும் சைக்கிள் பேரணியை
தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையிலும் பகுதி கழக செயலாளர்
*E.M.தர்மராஜ்* அவர்களின் முன்னிலையிலும் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இப்பேரணி மேலகல்கண்டார் கோட்டை திரு.வி.க திடலில் இருந்து புறப்பட்டு கம்பிகேட், மிலிட்டரி காலனி, எஸ்.ஐ.டி வழியாக காட்டூர் பகுதியில் முடிவடைந்தது.
இப்பேரணியில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.