திருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் பாலக்கரை ரவுண்டானா அருகில்
மாவட்ட செயலாளர் சபிதா தலைமையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் உஸ்மான் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் அசரப் அலி,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராகிம், மாவட்ட பொருளாளர் முகமது ராஜா மற்றும் எம்டிஎஸ் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்து
பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பாக திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டுனர்களை கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஷரிப், அப்துல் சமத், சம்சுதீன், அசாருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் இம்ரன் ஐ.பி.பி மாநில செயலாளர் ஜாபர் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்ç