முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழாவையொட்டி
திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கள்ளத்தெரு சந்திப்பில் சந்தக்கடை சந்துரு ஏற்பாட்டில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில்
மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் அதிமுக கொடி ஏற்றிவைத்தும், கல்வெட்டை திறந்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், ஏர்போட் விஜி, நிர்வாகிகள் வெல்லமண்டி ஜவர்கலால் நேரு, செந்தண்ணீர்புரம் கணேசன், கல்லுக்குழி கார்த்திகேயன், ஆட்டோ ரஜினி மற்றும் வட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.