Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாட ப.குமார் வலியுறுத்தல்.

0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்

73ம் ஆண்டு (24.02.2021) பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட

திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை தொகுதிகளில் அந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஏழை எளிய ஆதரவற்ற பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, வட்ட கழக, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

என திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.