சேலம் மாவட்டத்தில் காவேரி மிகை நீரை கொண்டு அங்குள்ள 58 ஏரிகளை நிரப்ப 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு நீர் கிடைக்காமல் பரம்பரை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் திருச்சியில் கே.என்.நேரு பேட்டி.
பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பாஜக, அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தி.மு.க கூட்டணியில் சேர கமலுக்கு தூது விடப்பட்டதா என்பது எனக்கு தெரியாது.

விவசாய கடன் தள்ளுபடி போன்றவை தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் வர வேண்டும் என தி.மு.க வினர் கூறினர்.இதை ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.ஸ்டாலின் கூறியதை தான் அவர் செயல்படுத்துகிறார்.
சேலம் மாவட்டத்தில் காவேரி மிகை நீரை கொண்டு அங்குள்ள 58 ஏரிகளை நிரப்ப 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு நீர் கிடைக்காமல் பரம்பரை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
தி.மு.க ஆட்சி காலத்தில் தான் திருச்சி மாவட்டம் வளர்ச்சி பெற்றது.
காவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தது கருணாநிதி தான்.அதற்கு நிதி ஒதுக்கி ஆரம்ப கட்ட பணிகளை தொடக்கினார்.அதன் பின்பு ஆட்சி மாறியதால் திட்டத்தை தொடர முடியவில்லை.ஆனால் தற்போது தேர்தலுக்காகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.
புதுச்சேரியில் தி.மு.க எம்.எல்.ஏ ராஜினாமா செய்தது போல தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நடக்காது.
தி.மு.க கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்கிற அதிகாரம் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளது.அவர் யாரை இணைத்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.