Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் தேதி அறிவித்தாலும் மாநில மாநாடு நடைபெறும். கே.என்.நேரு பேட்டி..

0

திருச்சி சிறுகனூர் மாநாடு திடல் அருகே திருச்சி திமுக வடக்கு மற்றும் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் திமுக கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இந்த கூட்டத்திற்கு பின்பு கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்..

பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து 22ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திருச்சி சிறுகனுாரில் மார்ச் 14ம் தேதி திமுக மாநாடு நடைபெறும் இடம் மட்டும் 369 ஏக்கர். திமுக மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக 400 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்காக 400 சிற்றுண்டி சாலைகள், 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடங்கள் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

77 திமுக மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்பதால் 77 தனித்தனியான இடங்கள், போக்குவரத்திற்காக சாலைகள் அகலப்படுத்தப்படுள்ளதோடு, புதிய சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் 22ம் தேதி தொடங்கி 10 நாட்களில் முடிவடைந்து விடும். இதுவரை நடைபெற்ற திமுக மாநாட்டிலேயே அதிக பரப்பளவில் அதாவது 700 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் திறந்த வௌி மாநாடாக இது அமையும்.

கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து 10 வருடம் அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவினர், சம்பந்தப்பட்டவர்களுக்கே தொியாமல் அவர்கள் பெயரில் கடன் வாங்கி உள்ளனர். இதனை தான் விவசாய கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ளனர். ஆட்சிக்கு வந்த உடன் யார் யார் கடன் பெற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை வௌியிடுவோம். அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லும் நகரும் என்பதை போல கவர்னரிடம் தொடர்ந்து புகார் பட்டியல் தந்து வருகிறோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களை ஆளுநர் அவமானப்படுத்தினார். கடைசியில் அவருக்கே அவமானம் நேர்ந்துள்ளது. எனவே பதவியில் உள்ளவர்கள் ஒழுங்காக பணியாற்ற வேண்டும். தேர்தல் தேதி அறிக்கப்பட்டாலும் மாநாட்டினை அது பாதிக்காது என்று அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி,
பரணிகுமார்,ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் , வழக்கறிஞர் பாஸ்கர் பகுதி செயலாளர்கள் கண்ணன்,மோகன்தாஸ், ராம்குமார் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.