திருச்சியில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
திருச்சி விக்னேஷ் ஹோட்டல் அருகே ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தியாகராசன் தலைமையில் நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட,
முடக்கப்பட்ட 21 ஒரு மாத நிலுவை தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க,
அனைத்து மருத்துவமனைகளிலும் அனைத்து விதமான சிகிச்சைக்கு ஆகும் செலவு தொகையை காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும்,
மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவபடியினை ஆயிரமாக உயர்த்தி வழங்க,
பொங்கல் பரிசாக ஒரு மாத ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்,
கள்ளர் சீரமைப்பு துறை யில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 1.6.88 க்கு முந்திய பணிக்காலத்தையும் சேர்த்து ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் தங்கவேலு, மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் பெ.டெரன்ஸ், மாவட்ட பொருளாளர் சவேரியர், மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.