அன்பில் அறக்கட்டளை சார்பில், ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமை
அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரியில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ வைத்து, நேர்காணலில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தும் – பாராட்டும் தெரிவித்தார் .
வேலை வாய்ப்பு முகாம்மில் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றன வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், இளம்பெண்கள் பங்கு கொண்டனர் .
முதற்கட்டமாக பங்கு பெற்ற இளைஞர்கள் இளம் பெண்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் .
இந்நிகழ்வில் அன்பில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் அன்பில் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் .