அகில இந்திய இந்து மகாசபா சார்பில் ஓயாமரி சுடுகாடு எரியூட்டும் இடத்தில் மாற்று மதத்தினரின் பைபிள் மற்றும் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதை கண்டித்து அகில இந்திய இந்து மகாசபா பெயர் பலகை அகற்ற வேண்டும் எனக் கோரி போராட்டம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இந்து மகா சபா வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர் என்ற தகவலை அறிந்த மாநகராட்சியினர் உடனடியாக அந்தப் பலகைகளை அகற்றிய காரணத்தினால் காவல்துறையின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டம் அகில இந்திய இந்து மகாசபா க்கு கிடைத்த வெற்றி என அகில இந்திய இந்து மகாசபா மாநில இளைஞரணி செயலாளர் ராகுல்ஜி மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் ஜி ஆகியோர் தெரிவித்தனர்.