திருச்சி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகை.
திருச்சி பாலக்கரை, மதுரை மெயின் ரோட்டில் உள்ள குடிசைமாற்று அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியிர் பாலக்கரை மண்டல் சார்பில் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்சி பாலக்கரை
செங்குளம் காலனியில் 2018 ஆம் ஆண்டு 642 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு முறைகேடாக வழங்கிய வீடுகளை திரும்ப பெற வேண்டும்.
சுகாதார பணிகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாததை கண்டித்தும், செங்குளம் காலனியில் 42 பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்காததை கண்டித்தும், சமுதாய கூடம் கட்டி தராததை கண்டித்தும், நிரந்தர குடிநீர் மற்றும் சுகாதார தேவைக்கு தேவையான நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாதிக்கப்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கும் போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் போலீசார் மற்றும் குடிசைமாற்று அதிகாரிகள் அவருடன் குடிசைபகுதி மாற்று வாரியத்தின் நிர்வாக பொறியாளர் பொன்னையா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு இந்த புகார்கள் சம்மந்தமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பாலக்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.