Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசி பலன்கள்

0

இன்றைய (16-02-2021) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்*

மேஷம்

உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளின் மூலம் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இளைய சகோதரர்களிடம் அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். மனதில் ஒருவிதமான பயமும், பதற்றமும் ஏற்பட்டு நீங்கும். பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.

பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
—————————————

ரிஷபம்

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். குழந்தைகளுக்கு படிப்பில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாக்குவன்மையால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.

ரோகிணி : சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

மிருகசீரிஷம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
—————————————

 

மிதுனம்

எதிர்பாராத உறவினர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனைவிவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : சுபவிரயங்கள் உண்டாகும்.

திருவாதிரை : சிக்கல்கள் குறையும்.

புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.
—————————————

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பமான சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். எதிர்பாராத சிறு சிறு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அவ்வப்போது கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

பூசம் : தீர்வு கிடைக்கும்.

ஆயில்யம் : மாற்றங்கள் பிறக்கும்.
—————————————

சிம்மம்

நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மூத்த உடன்பிறப்புகளிடம் பொறுமையுடன் செயல்படவும். செய்யும் பணிகளில் திருப்தியற்ற சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளின் விபரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பொறுமையுடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

பூரம் : திருப்தியற்ற நாள்.

உத்திரம் : பொறுமை வேண்டும்.
—————————————

கன்னி

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சமூகத்தில் பெரிய நபர்களின் அறிமுகங்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். புதிய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.

அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.

சித்திரை : அலைச்சல்கள் குறையும்.
—————————————

துலாம்

வங்கி தொடர்பான எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகள் குறையும். வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் காரியவெற்றி உண்டாகும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவதன் மூலம் ஒற்றுமையும், ஆதரவும் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை :வாய்ப்புகள் கிடைக்கும்.

சுவாதி : செலவுகள் ஏற்படும்.

விசாகம் : ஆதரவான நாள்.
—————————————

விருச்சகம்

குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமும், திருப்திகரமான வாய்ப்புகளும் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அலைச்சலுக்கு பின்பு ஈடேறும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : தெளிவு கிடைக்கும்.

அனுஷம் : திருப்திகரமான நாள்.

கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————

தனுசு
பிப்ரவரி 16, 2021

மாசி 04 – செவ்வாய்
மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மனம் அமைதியான சூழ்நிலையில் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுகளால் தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான நிலை அகலும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : முன்னேற்றமான நாள்.

பூராடம் : இழுபறிகள் அகலும்.

உத்திராடம் : லாபம் மேம்படும்.
—————————————

மகரம்

திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். நவீன தொழில்நுட்பம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சிறு வாய்ப்புகளையும் தகுந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் புதிய மாற்றத்தை உருவாக்க இயலும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் இன்றி அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : திட்டங்கள் ஈடேறும்.

திருவோணம் : மேன்மையான நாள்.

அவிட்டம் : நன்மைகள் அதிகரிக்கும்.
—————————————

கும்பம்

குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்காலம் சம்பந்தமான செயல்பாடுகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகளும், சில நேரங்களில் அலைச்சல்களும் ஏற்படும். மனதில் சுதந்திர மனப்பான்மை மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : செயல்பாடுகள் மேம்படும்.

சதயம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
—————————————

மீனம்

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். தனவரவுகள் எதிர்பார்த்த விதத்தில் கிடைத்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான நிலைமை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.

உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

ரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.