பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடெமி மற்றும் நல்லுசாமி அண்ணாவி அத்லடிக் அகாடமி சார்பில் 7 வது ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் 100 மீட்டர், 400 மீட்டர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், எறிபந்து உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது. 4 வயது முதல் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கான போட்டிகள் தனித்தனியே நடைபெற்றது.
திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 வீரர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியன் கமாண்டன்ட் ஆனந்தன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் சர்வதேச தடகள வீரர் அண்ணாவி, காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடெமி பயிற்சியாளர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.