திருச்சி இ.பி.ரோட்டில் உள்ள மதுரம் மேல்நிலைப் பள்ளி திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளில் மாவட்ட அளவில் பங்கு பெறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் பேட் , பந்து உள்பட கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான உபகரணங்கள், பனியன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அணிகளுக்கு அமைச்சரும், மாநகர் மாவட்ட அதிமுக. செயலாளருமான நடராஜன் ஏற்பாட்டில் வெல்ல மண்டி ஜவஹர்லால் நேரு வழங்கினார்.
அருகில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், தாயார் சீனிவாசன், பகுதி செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் நவசக்தி சண்முகம், பொன்.அகிலாண்டம், ஜெயக்குமார், சிங்கமுத்து, ரமணிலால், கலைப்பிரிவு மாவட்ட பொருளாளர் ஆர்.கண்ணன், ஷாஜஹான் மற்றும் பலர் உள்ளனர்.