திருச்சியில் சீர்மரபினர் நல சங்கத்தின் 68 சமூகத்தினர் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டி.என்.டி. ஒரே சான்றிதழ் வழங்க வலியுறுத்தி அமைச்சர் வளர்மதியிடம் மனு.
சீர்மரபினர் நலச்சங்கத்தின் 68 சாதி சமுகத்தினர் டி என் டி ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும்,
இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியை அவரது வீட்டில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் சந்தித்து மனு அளித்தனர் .
இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் மற்றும் சீர்மரபினர் நலச்சங்க தலைவர் அய்யாக்கண்ணு அகில இந்திய பார்வர்டுபிளாக் – பசும்பொன் மாநில செயலாளர் காசிமாயன் தேவர், முத்திரையர் அரசியல் களம் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.எம்.ராஜா, தமிழ்நாடு முத்திரையர் முன்னேற்ற சங்கத்தின். பிரேம்குமார், திருச்சி பிரான்மலை கள்ளர் சிவசக்தி, கூத்தைப்பார் கள்ளர் காளிதாஸ் பாண்டுதார், திருச்சி கூத்தைப்பார் கள்ளர் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், தேசிய செட்டியார் பேரவை (தெலுங்குபட்டி செட்டி) பிரகாஷ் சிதம்பரம், பெரிய சூரியூர் கள்ளர் பேரவை முருகன், முத்திரையர் அரசியல் களம் சுப்புலட்சுமி தமிழ்நாடு அம்பலக்காரர் பேரவை தமிழ்செல்வன் மற்றும் சீர்மரபினர் 68 சாதி சமுகத்தினர் கலந்து கொண்டார்கள்..