எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி சித்த மருத்துவ சங்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு சேலை மற்றும் சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் மற்றும் அன்னதானத்தையும் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் வழங்கினார்.
அதிமுக.நிறுவனர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் விழாவையொட்டி சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர், கவுன்சில் சார்பில் இலவச சேலை மற்றும் சித்தா, ஆயுர்வேதா அக்குபஞ்சர் 2042-வது இலவச மருத்துவ முகாம் தில்லைநகரில் உள்ள கார்த்திக் சித்தா வைத்திய சாலாவில் நடைபெற்றது.
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர். கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
ஏழை எளிய மக்களுக்கு சேலை மற்றும் சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் மற்றும் அன்னதானத்தையும் வழங்கினார்.
முன்னதாக தேசிய ஒருங்கிணைப்பாளர் பா.ஜான் ராஜ்குமார் வரவேற்புரை யாற்றினார்.
இதில் டாக்டர்கள் கணேசன். அபுபக்கர் சித்திக், வி. மகேஷ்,, பேராசிரியர் அருள், டாக்டர்கள் மதிக்குமார், செல்வகணபதி, ரத்தினகுமார், குமார், சகுந்தலா மற்றும் சந்தானகிருஷ்ணன், அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு அக்குபஞ்சர் கவுன்சில் டாக்டர். விஜய் கார்த்திக் நன்றி கூறினார்.