பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் வடமாநில வியாபாரிகள் திருச்சி கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருச்சி பெரிய கம்மாளர் வீதி, பெரிய கடை வீதி, சௌராஷ்டிரா தெரு பகுதிகளில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வைத்துருக்கும் கடைகளை பிப்ரவரி 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அடைக்க வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சிலர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
அந்த நோட்டீசஸில்
“மதக்கலவரத்தை தூண்டும் பா.ஜ.கவுக்கு பொருளாதார உதவி செய்யும் மார்வாடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” என்ற தலைப்புடன் கூடிய வாசகம் அடங்கிய நோட்டீசை அப்பகுதி முழுவதும் வழங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஸ்ரீ ராஜஸ்தான் விஷ்ணு சமாஜ் சங் என்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களின் கடைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பிஜேபியை தவறாக சித்தரித்து, கடைகளை மூடக் கோரி மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
பிஜேபியின் வர்த்தக அணி மாநில செயலாளர் முரளிதரன் தலைமையில்.
பிஜேபியினர் மற்றும் வடமாநிலத்தினர் தலைவர் சோப்ராஜ் தலைமையில் மார்வாடியினர் திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்திலிடம் புகார் மனு அளித்தனர்.
மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை திடீர் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீஸ் துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி, வேதரத்தினம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்படாமல் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை நடத்திய பிஜேபியினர் மற்றும் வடமாநிலத்தினர் கைது செய்யப்பட்டனர்..
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.